வடபுலத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை திங்கட்கிழமை யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கிறது.
எனினும், தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment