இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை மாலைதீவுக்கு அனுப்புவதற்கு இலங்கை ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை தமது நாடு பரிசீலிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் ஷஹீத்.
இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மாலை தீவின் ஜனாதிபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10ம் திகதி பிரதமர் நடாத்திய கூட்டத்தில் வைத்து இவ்விடயம் முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் 20ம் திருத்தச் சட்டத்துக்காக கட்சி தாவிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் மூடி அதனை செவி மடுத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அதற்கான உத்தியோகபூர்வ வேண்டுகோளினை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment