பொலிஸ் மா அதிபரின் சாரதியாகப் பணியாற்றியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் பின்னணியில் பொலிஸ் மா அதிபர் உட்பட தலைமையக ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்களன்று குறித்த சாரதிக்கு வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டதன் பின்னணியில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இவ்வார பாதுகாப்பு கவுன்சில் சந்திப்புக்கு பொலிஸ் மா அதிபர் செல்லவில்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்துக்கு ஏனைய அதிகாரிகள் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment