சுற்றுலாத்துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை இலக்காக வைத்து விமான நிலையத்தைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.
தற்போது மீண்டும் வெளிநாடுகளில் முடங்கியுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை செய்து கொடுக்கும் நிலையங்களையும் உருவாக்கி மீண்டும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய கட்டுப்பாடும் அமுலில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment