நீதியமைச்சர் அலி சப்ரி நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்துவதாக சபையில் குற்றங்சாட்டியுள்ளார் சமகி ஜன பலவேகயவின் மனுஷ நானாயக்கார. இன்றைய நாடாளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
சிரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் அலி சப்ரியின் கனிஷ்ட சட்டத்தரணியொருவரே ஆஜராகி வழக்கை திசை திருப்பி வருவதாகவும் நீதித்துறையில் தலையீடிருப்பதாகவும் மனுஷ தெரிவித்திருந்தார். இந்நிலையில் பதிலளித்த நீதியமைச்சர், சட்டத்தரணிகளாக அவர்களுக்கு ஆஜராவதற்கான உரிமையிருப்பதாகவும் மனுஷ நானாயக்காரவின் விவகாரத்து வழக்கில் அவரது மனைவி சார்பில் தாமே ஆஜராகியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த மனுஷ, அது உண்மையெனவும் தனது முன்னாள் மனைவிக்கு நீதிபதியின் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து நீதிபதியிடம் உரையாடும் படியும் அலி சப்ரி தெரிவித்திருந்ததாகவும் சபையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சியினருக்கும் - ஆளுங்கட்சியினருக்குமிடையில் பல்வேறு தகாத வார்த்தைப் பிரயோகங்கள் பரிமாறக்கொள்ளப்பட்டதுடன் நாடாளுமன்ற கையேடும் தூக்கி வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment