நேற்றைய தினம் உச்ச நீதிமன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் பின்னணியில் ரஞ்சன் ராமநாயக்கவுக்க எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையை விமர்சித்து ஊடகங்களில் பேசியதன் பின்னணியில் ரஞ்சனுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு இன்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
தன்னை ஆகக்குறைந்தது இரு வருடங்கள் சிறையிலடைக்கப் போகிறார்கள் என்று அண்மையில் நாடாளுமன்றில் ரஞ்சன் தெரிவித்திருந்தார். எனினும், நேற்றைய தீ விபத்தினால் வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment