கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 23 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகியுள்ளார்.
முல்லேரியா வைத்தியசாலையில் சிசேரியனர் முறையில் அவரது குழந்தைகள் பிறந்துள்ளன. ஏலவே நீரிழிவு மற்றும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 37 வாரங்கள் நிறைவில் சிசேரியன் செய்ய வேண்டியிருந்ததாகவும் குழந்தைகள் எடை குறைந்து பிறந்துள்ளதால் மேலதிகமாக கண்காணித்து சிகிச்சை வழங்கப்படுவதாகவும் வைத்தியசாலை தரப்பு தெரிவிக்கிறது.
கடந்த ஞாயிறு சிசேரியன் இடம்பெற்றதாகவும் தாயும் சேய்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment