நீதியமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் உலவும் தகவலை அவர் மறுத்துள்ளார்.
தனக்கே தெரியாத இராஜினாமா கடிதம் பற்றி தகவல் வெளியாகியுள்ளதாக தனது அதிருப்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
ஜனாஸா எரிப்புக்கு எதிரான அழுத்தங்களின் பின்னணியில் அலி சப்ரி இவ்வாறு தனது இராஜினாமாவை ஒப்படைத்ததாக முன்னதாக தகவல் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment