இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை ஏற்று மாலை தீவில் அடக்கம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தமை அமைச்சரவையில் யாருக்கும் தெரியாது என்கிறார் ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல.
நேற்றைய தினம் மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் வேண்டுகோளை தாம் பரிசீலிப்பதாக தகவல் வெளியிட்டிருந்ததன் பின்னணியில் இவ்விவகாரம் பேசு பொருளாகியுள்ளது.
இந்நிலையிலேயே, இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து வினவப்பட்டதற்கு கெஹலிய இவ்வாறு பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment