உலக முஸ்லிம் சமூகத்துக்காகக் குரல் கொடுத்த நபராக கடந்த காலத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம்.
இந்தியாவில் இது தொடர்பில் நடந்த வழக்குகள் மற்றும் உலகின் அனைத்து நாடுகளிலும் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் நடைமுறைகளையும் சுட்டிக்காட்டி பிரத்யேக வினாவை முன் வைத்த கஜேந்திர குமார், முஸ்லிம்களின் சமூக - சமய உரிமைகள் இவ்வாறு மறுக்கப்படுவது அநீதியென தனதுரையின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் பின் தொடர்ந்த ரவுப் ஹக்கீம், உடலங்கள் வைத்தியசாலைகளில் குவிக்கப்பட்டு ஒரேயடியாக எரியூட்டப்படும் செய்திகளைக் கேட்டு குடும்பங்கள் பாரிய மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment