உறவினர்கள் பொறுப்பேற்காத நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் குவிந்துள்ள ஜனாஸாக்களை எரிப்பதற்கு அனுமதியுள்ளதாக சட்டவிளக்கம் அளித்துள்ளார் சட்டமா அதிபர்.
சுகாதார அமைச்சு இது தொடர்பில் முன் வைத்த கோரிக்கைக்கமைவாக சட்டமா அதிபர் அலுவலகம் இவ்விளக்கத்தினை சுகாதார பணிப்பாளருக்கு வழங்கியுள்ளது.
எரியூட்டலுக்கு ஒப்பமிடுமாறு உறவினர்கள் வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் அதனை அண்மைக்காலமாக உறவினர்கள் மறுப்பதால் ஜனாஸாக்கள் குவிந்துள்ளன. இந்நிலையில், சட்டமா அதிபரின் விளக்கத்தினையடுத்து அரச செலவில் எரியூட்டலை மேற்கொள்ளுமாறு கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment