இலங்கையில் இரண்டாவது அலை கொரோனா பரவலில் பாரிய பங்களித்தத பேலியகொட மீன் சந்தையை புதன் கிழமை மீளத் திறப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அங்கு நேரடியாக விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதன் நள்ளிரவுடன் சுகாதார வழிகாட்டலுக்கமைவாக மீன் சந்தையைத் திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சற்று முன்னரும் 356 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்த அதேவேளை அதில் 302 பேர் பேலியெகொட கொத்தனியுடன் தொடர்புடைய சிறைக்கைதிகள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment