நடைமுறை அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய அமைதிப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன் கூடிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீப்பந்தம் ஏற்றி, பொய்யைத் தோற்கடித்து உண்மைக்கு இடங்கொடுப்போம் போன்ற வாசகங்களுடனான பதாதைகளையும் தொங்க விட்டிருந்தனர்.
அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment