இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்கள் கட்டாய எரிப்புக்குள்ளாக்கப்படுவதை உலகமே கண்டித்து வருகின்ற போதிலும் இலங்கை அரசு அலட்சியமாக உள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அதேவேளை உள்நாட்டிலும் அமைதி வழி போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இப்பின்னணியில், மாளிகாவத்தை ரயில்வே குடியிருப்பு பகுதியில் உள்ள தண்ணீர் தாங்கியில் ஏறி தனது எதிர்ப்பை ஒருவர் வெளியிட்டுள்ளார்.
தீயணைப்பு படையினர் விரைந்து அவரைக் கீழிறங்குமாறு கோரியும் தமது எதிர்ப்பை அவர் தனி மனிதனாகப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment