தென்னிந்திய பகுதிகளில் பாரிய சேதங்களை உருவாக்கிய புரெவி புயல் இன்று மாலை 7 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் இலங்கையின் கரையோரப் பகுதிகளையும் தாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது வளிமண்டலவியல் திணைக்களம்.
இப்பின்னணியில் இன்னும் இரண்டு தினங்களுக்கு நாட்டின் பல பாகங்களிலும் பலமான காற்று வீசக்கூடும் எனவும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நிமித்தம் பயணிப்பதை நிறுத்தி வைக்குமாறும் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு, வட-மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் மழை வீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment