இன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில் அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
இதேவேளை, குறித்த சம்பவத்தை விசாரிக்க மூன்று சி.ஐ.டி குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இரசாயன பகுப்பாய்வு நிபுணர்கள், இலத்திரனியல் நிபுணர்கள் இவ்விசாரணையில் பயன்படுத்தப்படவுள்ளதுடன் நீதிமன்ற ஆவணங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment