சீனாவிடம் பெற்றிருந்த 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் 2017ம் வருடம் சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் 300 மில்லியன் டொலர் முதலீட்டில் டயர் தொழிற்சாலையொன்று உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டயர்களில் 80 வீதமானவை ஏற்றுமதி செய்யப்படும் எனவும் 20 வீதமானவை உள்நாட்டு சந்தையில் விநியோகிக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சீன கடன் வலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அவதானம் வெளியிட்டு வரும் அதேவேளை, இலங்கையில் சீனாவின் தலையீடு தொடர்பில் இந்தியா கவலை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment