சந்திரனில் தமது நாட்டின் கொடியை நட்டுள்ள இரண்டாவது நாடெனும் பெருமையைத் தனதாக்கிக் கொண்டுள்ளது சீனா.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக சீனக் கொடியே சந்திரனில் பறக்கின்ற அதேவேளை 1976 ரஷ்யாவின் முயற்சிக்குப் பின் முதற்தடவையாக அங்கிருந்து நிலத்தின் மாதிரிகைளையும் ஏற்றிக் கொண்டு சீன விண்கலம் பூமி திரும்புகிறது.
அனைத்து காலநிலைக்கும் ஒத்துப் போகும் வகையிலான விசேட துணியில் உருவாக்கப்பட்ட கொடியை ஆளில்லா விண்கலம் மூலம் சீனா சந்திரனில் நிறுவியுள்ள அதேவேளை இதுவே வேற்றுக் கிரகம் ஒன்றுக்குச் சென்று சீன விண்கலமொன்று பூமிக்குத் திரும்பும் முதற்தடவையென்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment