பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் மேல் மாகாணத்தை முழுமையாக மூடுவதற்கான திட்டம் எதுவுமில்லையெனவும் மக்கள் இது தொடர்பில் பதற்றமடையத் தேவையில்லையெனவும் தெரிவிக்கிறார் இராணு தளபதி ஷவேந்திர சில்வா.
கொரோனா பாதிப்பு ஏற்படும் பிரதேசங்களை மாத்திரம் தனிமைப்படுத்துவதே அரசின் திட்டம் எனவும் விளக்கமளித்துள்ள அவர், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தற்சமயம், 7277 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment