கட்டாய ஜனாஸா எரிப்புக்கு எதிராக இன்று கொழும்பில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பொரளை கனத்தை மயானத்துக்கு அருகில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு மதிப்பளி, மனித உரிமைகளுக்கு மதிப்பளி, 20 நாள் குழந்தை செய்த தீங்கென்ன? அடக்கம் செய்வது அனைவரின் உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தொடர்ச்சியாக பல நாடுகளில் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment