எரிக்கும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: நீதிமன்றில் தெரிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 December 2020

எரிக்கும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: நீதிமன்றில் தெரிவிப்பு!

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் உடலங்களை எரிக்கும் அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லையென நீதிமன்றில் தெரிவித்துள்ளார் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன.


மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானோரில் சில உடலங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் நீதிமன்றில் இது தொடர்பில் இன்று வத்தளை நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் போது ஆஜராகிய சுகாதார பணிப்பாளர் நீதிமன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் மஹர சிறைக்கைதிகளின் உடலங்கள் சில பிரேத பரிசோதனையின் பின்னர் எரியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment