கொலைக் குற்றத்தின் பின்னணியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னான்டோ.
துமிந்தவுக்கு வழங்கப்பட்டது அரசியல் தீர்ப்பேயன்றி நீதியில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், நீதியை மதிக்கும் தற்போதைய அரசு அவரது விடுதலைக்கான ஆவன செய்ய வேண்டுமென மேலும் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பலர் தொடர்ச்சியாக விடுதலை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment