ஓட்டமாவடி: நிபந்தனைகளுடன் தொழுகை நடாத்த அனுமதி - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 December 2020

ஓட்டமாவடி: நிபந்தனைகளுடன் தொழுகை நடாத்த அனுமதி

 


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஒக்டோபர் மாதம் 25 ம் திகதி தற்காலிகமாக மூடி வைக்கப்பட்ட அனைத்துப் பள்ளிவாசல்களையும் திறந்து தொழுகை நடாத்த நேற்று (7) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சுகாதார அறிவுறுத்துதல்களைக் கடைப்பிடித்து ஒரே நேரத்தில் 25 பேர் மாத்திரமே தொழுகையில் கலந்து கொள்ள வைத்திய அதிகாரி அலுவலகங்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சுகாதார நடைமுறைகளை பேணாத பள்ளிவாசல்கள் நிர்வாகத்தினர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பள்ளிவாசல்கள் நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


- M. Farzan


1 comment:

Post a Comment