உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்படும் தடுப்பூசியை பெப்ரவரி மாதம் அளவில் இலங்கை பெற்றுக் கொள்ளலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான.
ஐக்கிய இராச்சியத்தில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இலங்கை கால நிலைக்கு ஒவ்வாதது எனவும் அதனை -70 டிகிரி செல்சியசில் பாதுகாக்கக் கூடிய வாய்ப்பு இலங்கையில் இல்லையெனவும் விளக்கமளித்துள்ள அவர், மாற்று தடுப்பூசி கிடைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பைசர் மற்றும் பயன்டெக் நிறுவனத்தின் தயாரிப்பான கொரோனா தடுப்பூசி ஐக்கிய இராச்சியத்தில் பொது மக்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment