இலங்கையர் வெளிநாடுகளுக்க வேலைக்குச் செல்வது ஊடாக வருடாந்தம் நாட்டுக்கு 8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைப்பதாகவும் அது நாட்டின் பொருளாதாரத்துக்கு கட்டாயம் அவசியப்படும் விடயம் எனவும் தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன.
இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கின்ற அவர், அதற்கேற்ப அந்நாடுகளின் மொழிகளைக் கற்பிக்கும் பணிகளும் இடம்பெறுவதாக தெரிவிக்கிறார்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, ஏற்றுமதி மற்றும் சுற்றுத்துலாத்துறை போன்று இலங்கையரை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதும் கட்டாயமாகிறது என அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment