கொரோனா தொற்று பின்னணியில் முகாமில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நால்வர், சிகிச்சை முடிந்து வெளியேற வீடு திரும்ப முன்பாக வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகாமிலிருந்து இலத்திரனியல் உபககரணங்களைத் திருடிய சந்தேகத்தில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
கொழும்பு 2 மற்றும் மஸ்கெலியவைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment