ஜனாஸா எரிப்புக்கு எதிராக தண்ணீர் தாங்கியில் ஏறி போராடிய கொழும்பு, பிக்சர்ஸ் லேன் பகுதியைச் சேர்ந்த சகோதரரை பொலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அவரை வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்தி விட்டு வீட்டுக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை யாரும் தூண்டவில்லை, தானாகவே சமூகத்தை எண்ணி தனித்துப் போராடியாதாக குறித்த சகோதரர் பொலிசில் வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment