இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்ற பௌத்த பிக்குகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் நடைபவனியும் அரசாங்கத்தின் திட்டம் என தெரிவிக்கிறார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் (அக்மீமன தயாராத்ன, இத்தேகந்த சத்தாதிஸ்ஸ, மெடில்லே பன்னாலோக உட்பட்ட தேரர்கள்) அரசாங்கத்துக்காக பிரச்சாரம் செய்து, ஆட்சியாளர்களின் ஆசியுடன் இயங்கி வருபவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தேரர்கள், ஏப்ரல் மாதம் திருத்தியமைக்கப்பட்டு எரிப்பதொன்றே தீர்வென முன் வைக்கப்பட்ட அறிவிப்பை தொடர வேண்டும் என இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment