ஜனவரி முதல் சுற்றுலா பயணிகள் வருகையை அனுமதிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் சுற்றுலாத்துறை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு மாத்திரம் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாசிக்குடா, யால, பெந்தொட்ட, கொக்கல போன்ற பகுதிகளுக்கே கட்டம் கட்டமாக சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment