முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஷானி அபேசேகரவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சாட்சியங்களைத் திரிபு படுத்திய குற்றச்சாட்டின் பின்னணியில் ஜுலை மாதம் கைது செய்யப்பட்ட அபேசேகர தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கம்பஹா உயர் நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்துள்ளமையும் கடந்த ஆட்சியில் ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய வழக்குகளை இவரே விசாரித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment