மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் உயிரழந்தோரில் ஆறு பேரின் உடலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கு அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, சம்பவத்தின் பின்னணி ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில்,நேற்றைய தினம் இரு உடலங்களும் இன்றைய தினம் நான்கு உடலங்களும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துக்கு போதைப் பொருள் காரணம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment