தனிமைப்படுத்தப்பட்டிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகள் விடுவிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 12 December 2020

தனிமைப்படுத்தப்பட்டிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகள் விடுவிப்பு

 


கொழும்பு 15, 14 மற்றும் தெமட்டகொட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  ஆறு அடுக்கு மாடி குடியிருப்பு வளாகங்கள் இன்று அதிகாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒக்டோபர் 4ம் திகதி முதல் அறியப்படும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியுள்ள அதேவேளை கொழும்பு மாவட்டத்திலிருந்தே அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், கொழும்பில் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன் பொது மக்களும் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர். இச்சூழ்நிலையில் ஆறு அடுக்கு மாடி குடியிருப்பு தொகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.


அவையாவன: 


• Methsanda Sevana flats in Modara

• Randiya Uyana flats in Mattakkuliya

• Mihijaya Sewana flats in Modara

• Modara Uyana flats in Grandpass

• Samagipura flats in Grandpass

• Mihindusethpura flats in Dematagoda

No comments:

Post a Comment