கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் திரவம் என அரசாங்கம் மற்றும் அரச சார்பு ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்படும் ஆயுர்வேத பானம் நாடகமாக முடிந்து விடக்கூடாது என்கிறார் சம்பிக்க ரணவக்க.
இலங்கை ஆயுர்வேத மருந்து கட்டுப்பாட்டுக் குழுவினால் அங்கீகாரமளிக்கப்பட்டால் மாத்திரமே அதனை பொது மக்களுக்க விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1956 ல் சூரிய கிரகணத்தின் போது தேகத்தின் தோற்றத்தினை மெருகூட்ட முடியும் எனக் கூறி 'வதகசூரிய' எனும் மருந்தை குடித்தவர்களில் பெரும்பாலானோர் வைத்தியசாலைகளில் உறங்க நேரிட்டது எனவும் அது போல இந்த விடயத்தையும் போலியாக விளம்பரப்படுத்தாமல் முறையான அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment