அங்கொட லொக்காவுக்கு ஆயுதம் தயாரித்தவர் கைது - sonakar.com

Post Top Ad

Monday, 14 December 2020

அங்கொட லொக்காவுக்கு ஆயுதம் தயாரித்தவர் கைது

 


பிரபல பாதாள உலக பேர்வழி அங்கொட லொக்காவுக்கு உள்நாட்டில் ஆயுதங்கள் தயாரித்து வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


வாகன கடத்தல், கொள்ளைக் குற்றச்சாட்டுகளுள்ள நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைதின் போது கைக்குண்டு, துப்பாக்கி ரவைகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்தியாவில் அங்கொட லொக்க உயிரிழந்திருந்த அதேவேளை தொடர்ந்தும் வலையமைப்பைத் தேடி வருவதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a Comment