சொந்தக் குடிமக்களது உரிமையை மறுத்து அதனை வெளிநாடொன்றிடம் கோரிக்கையாக முன் வைத்துள்ள இலங்கையின் செயல் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் மங்கள சமரவீர.
இலங்கையில் ஜனாஸாக்களை எரிப்பதற்கு, எதுவித விஞ்ஞானபூர்வ ஆதாரமுமற்று மறுத்து வரும் இலங்கையரசு மாலை தீவு அரசிடம் இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், அந்நாடு அதனை பரிசீலிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளதன் பின்னணியில் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ள மாலைதீவிடம் முன் வைக்கப்பட்டுள்ள இக்கோரிக்கை இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் அடையாளத்தை இல்லாதொழிக்கும் செயல் என சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள் பல முனைகளிலிருந்தும் தாம் வாழும் நாடுகளில் உள்ள மாலைதீவு தூதரகத்துக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment