இலங்கையின் கொரோனா உடலங்களை மாலைதீவில் அடக்க அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையும்.
நேற்றைய தினம் இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைவாக மாலைதீவு இதனை பரிசீலிப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இலங்கையில் முஸ்லிம சமூகத்திலிருந்து இதற்கு பாரிய எதிர்ப்பு வெளியாகி வருவதுடன் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்ற நிலைப்பாடு வலுத்து வருகிறது. இச்சூழ்நிலையில் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் உள்நாட்டில் இதனை கேள்விக்குட்படுத்த ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment