பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் ஜனாஸா எரிப்பு, மனித நேயம் கொண்ட உள்ளங்களைத் தட்டியெழுப்பியுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (12) பொரளை சவச்சாலை வேலியில் வெள்ளைத் துணி கட்டி தமது ஆதங்கத்தை வெளியிடும் நூதன போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதில் மனித நேயம் கொண்ட அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் சிங்கள இளைஞர்கள் இப்போராட்டத்தை ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுத்திருந்தனர்.
இதில் கலந்து கொண்ட சிங்கள இளைஞர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், மனித நேயத்தைக் காப்பாற்ற முடியாதபடி 'பேரினம்' என்கிற கௌரவம் தனக்கு அவசியமில்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment