20 நாள் குழந்தை எரிப்பின் பின்னணியில் துவண்டெழுந்து மனித நேய மனம் படைத்தவர்களால் பொரளை சவச்சாலையில் வெள்ளைத் துணி கட்டும் எதிர்ப்பு நடவடிக்கை வார இறுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், அங்கு கட்டப்பட்ட துணிகளை அரசு இரவேடிரவாக அகற்றியுள்ளமை மனித நேய ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாட்டின் பல பாகங்களுக்கும் பரவியிருந்த குறித்த போராட்டத்தினால் அரசாங்கம் கவனமெடுக்க ஆரம்பித்துள்ளமை இதிலிருந்து புலப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் தத்தம் வீடுகளிலேயே இவ்வெதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment