கொரேனா உடனடி நிவாரணியென அரச ஆதரவு ஊடகமான அத தெரண மிகத் தீவிரமாக விளம்பரப்படுத்தியிருந்த கேகாலை தம்மிக்கவின் கொரோனா பானியைக் குடித்த வயது குழந்தை, தாய் உட்பட ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த நபரினால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட திரவத்தினைப் பெற மதத் தலைவர்கள், பாதுகாப்பு படையினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கேகாலையில் ஒன்று கூடியிருந்த நிலையில் அதில் கலந்து கொண்டோர் அவதானமாக இருக்குமாறு மருத்துவர் ஹரித் அலுத்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் குறித்த 'பானியை' குடித்து விளம்பரப்படுத்தியிருந்ததோடு பிரத்யேகமாக அதனைப் பருகிய சபாநாயகர் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment