வைத்தியசாலைகளில் கைவிடப்பட்டிருந்த எட்டு ஜனாஸாக்கள் நேற்றைய தினம் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் எஞ்சியுள்ள ஜனாஸாக்களை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை கொழும்பு மாநகர சபை மேற்கொள்கிறது.
பிறந்து 20 நாட்களேயான பாலகன் உட்பட 19 ஜனாஸாக்கள் இவ்வாறு கட்டாய எரிப்புக்குட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை உறவினர்கள் தம் வேதனைகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரிவித்து வருகின்றனர்.
எனினும், இதுவரை நிரூபிக்கப்படாத விஞ்ஞானத்தை முன் வைத்து இலங்கையில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றமையும் இதில் பல ஜனாஸாக்கள் திட்டமிட்டு கொரோனா தொற்றென தெரிவிக்கப்படுபவை என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டு வருகின்றமையும், அண்மையில் கொரோனா இல்லாத முஸ்லிம்களின் எத்தனை முஸ்லிம்களின் உடலங்களை எரித்துள்ளீர்கள்? என்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment