கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறப்படும் உடலங்களை கட்டாயமாக எரிப்பதன் அடிப்படையில் முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினரின் சமய உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்தும், அரசாங்கத்தை மீள் பரிசீலனை செய்யக் கோரியும் இன்றைய தினம் லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
லண்டனில் இயங்கும் இலங்கைத் தூதரகம் முன்பாக இவ்வார்ப்பாட்டம் முஸ்லிம் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, சுகாதார வழிகாட்டல்களுக்கமைவான கட்டுப்பாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் சோனகர்.கொம்முக்கு தெரிவித்தனர்.
மதியம் 12 மணி (இலங்கை நேரம் மாலை 5.30) முதல் 4 மணி வரை தூதரகம் முன்பாக தமது ஆதங்கங்களை, உணர்வுகளை பதிவு செய்யும் வகையில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment