சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்த கொவிட்-19 ஆத்மீக விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கை புதன்கிழமை (30) மாலை மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எம். சலீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு மாளிகைக்காடு பிரதேசம் முழுவதிலும் நடைபெற்றது.
ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஆத்மீக சொற்பொழிவை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாபா ரஷாதி, மாவடிப்பள்ளி அஸ்-ஸஹ்தி அரபுக்கல்லூரி முதல்வர் மெளலவி யூ. எல்.எம். முபாறக் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்த விழிப்புணர்பு பிரச்சார நடவடிக்கையில் மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபை உலமாக்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகவும் வர்த்தகநிலையங்களிலும் விநியோகித்தனர். இதனை தொடர்ந்து சுனாமி வீட்டுத்திட்டமான பொலிவேரியன் கிராமத்திலும் இவ்விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
-நூருல் ஹுதா உமர்
No comments:
Post a Comment