காலி முகத்திடலில் திடீர் பரிசோதனை: 9 பேருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 December 2020

காலி முகத்திடலில் திடீர் பரிசோதனை: 9 பேருக்கு கொரோனா

 


காலி முகத்திடல் பகுதியில் நடாத்தப்பட்ட திடீர் கொரோனா பரிசோதனையின் பின்னணியில் 9 பேருக்கு வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சுழற்சி முறையில் நடாத்தப்பட்ட திடீர் பரிசோதனையின் போதே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


என்டிஜென் துரித பரிசோதனை முறையில் இவ்வாறு புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முயன்ற 13 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment