இன்றைய தினம் இதுவரை 762 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதியாக இன்று 226 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள அதேவேளை பெரும்பாலானோர் பேலியகொட கொத்தனியுடன் தொடர்புடையவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் 538 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்தனர்.
தற்சமயம், 8398 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை மார்ச் மாதம் முதல் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 31,375 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment