வடக்கில் வெள்ளம்: 70 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 6 December 2020

வடக்கில் வெள்ளம்: 70 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிப்பு

 


வடபுலத்தில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சூழ்நிலையில் 22 ஆயிரத்துக்கு அதிகமான குடும்பங்களிலிருந்து 72, 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் யாழ்ப்பாண மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 17,243 குடும்பங்களைச் சேர்ந்த 57,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கிறது.


இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50க்கு மேற்பட்ட தற்காலிக உதவி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment