மரண தண்டனைக் குற்றவாளி துமிந்த சில்வாவை விடுவிப்பது அரசின் தார்மீகக் கடமையெனவும் அதற்காகவே 69 லட்சம் மக்கள் வாக்களித்ததாகவும் தெரிவிக்கிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அநீதிகளை சரிப்படுத்தவே மக்கள் இந்த அரசுக்கு ஆணையிட்டுள்ளதாகவும் அந்த வகையில் துமிந்த சில்வாவை விடுவிப்பது கடமையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் சிறைப்படுத்தப்பட்ட பிரபலங்கள் விடுவிக்கப்பட்டு வரும் தொடர்ச்சியில் துமிந்தவின் விடுதலையும் சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment