நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் 627 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் 402 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இதில் 207 பேர் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு கொரோனா இரண்டாவது அலையில் தெஹிவளை - கல்கிஸ்ஸ பகுதியில் இதுவரை 90 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒக்டோபர் 4ம் திகதியிலிருந்து இதுவரை கொழும்பு மாவட்டத்திலிருந்து மாத்திரம் 10,542 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment