600க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு தொற்று - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 December 2020

600க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு தொற்று

 


இலங்கையில் தற்சமயம் 600க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கொரோனா தொடர்பில் கர்ப்பிணிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள அதேவேளை அச்சத்தினால் தமது வழமையான கிளினிக் நடவடிக்கைகளைத் தவிர்க்கக் கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


தற்சமயம் கொரோனா தொற்றுள்ள 8188 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 33221 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment