நேற்றைய தினம் நாட்டில் 549 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்தே அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதம் முதல் இதுவரை இலங்கையில் 41603 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 33221 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்நிலையில் 8188 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றோடு 194 ஆக உயர்ந்துள்ளமையும் அதில் 182 கடந்த இரு மாதங்களுக்குள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment