மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உயிரிழந்தோர் தொகை 9 ஆக அதிகரித்துள்ளது.
காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவத்தில் தொடர்பு பட்ட 38 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
102 கைதிகள் மற்றும் 02 சிறைக்காவலர்கள் குறித்த வன்முறையின் பின்னணியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment